ரஜினி பற்றியும்..கேப்டன் பற்றியும் ஒரு படுபயங்கர ரகசிய செய்தி: படிங்க யார்கிட்டயும் மூச்சு விடாதீங்க..
ரஜினிக்கும் விஜயகாந்த்துக்கும் இருக்கும் வேறுபாடுகள். இப்படி ஒரு பதிவு இரண்டு மூன்று நாட்களாக சமூகவலைத் தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
படிங்க இந்தப் பதிவு ரொம்பவே உங்களை யோசிக்க வைக்கும்.!
கொஞ்சம் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து சுகவாசியாக வாழ்ந்து வருபவர் ரஜினி.கொஞ்சம் வசதியான குடும்பத்தில் பிறந்திருந்தாலும் எளிமையாக வாழ பழகிக் கொண்டவர் விஜயகாந்த்.
சினிமாவில் பாலச்சந்தர்,மகேந்திரன்,பாரதிராஜா,மணிரத்னம் போன்ற பெரிய இயக்குநர்களால் உருவானவர் ரஜினி
ஆர்.கே.செல்வமணி,ஆபாவாணன்,அரவிந்த்ராஜ்,மகாராஜன் உள்ளிட்ட திரைப்பட கல்லூரி மாணவர்கள் 32 பேருக்கு இயக்குநராக வாய்ப்பளித்தவர் விஜயகாந்த்.
தனது திருமணத்தை மதுரை தமுக்கம் மைதானத்தில் லட்சக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் வடை பாயாசம் விருந்தோடு நடத்தியவர் விஜயகாந்த்.
தன் இளைய மகள் சௌந்தர்யாவின் திருமண வரவேற்பு விழாவிற்கு அழையா விருந்தாளிகளாக வந்த ரசிகர்களை செக்யூரிட்டிகளை வைத்து அடித்து விரட்டியவர் ரஜினி.
மாணவ பருவத்திலேயே திமுக முன்னெடுத்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றவர் விஜயகாந்த்.இது வரை மொழிக்கான போராட்டத்தில் தலை காட்டாதவர் ரஜினி.
இலங்கை தமிழர் இனப்படு கொலையை கண்டித்து 1986 லேயே நடிகர்களை திரட்டி சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதம் இருந்தவர் விஜயகாந்த்.அந்த சமயத்தில் மும்பையில் இந்தி படம் ஒன்றின் படப்பிடிப்பில் பிசியாக இருந்தவர் ரஜினி.
படப்பிடிப்பின் போது தன்னுடன் பணியாற்றும் சக நடிகர்கள்,டெக்னீஷியன்கள்,ஊழியர்கள் வரை அனைவருக்கும் சரி சமமான உணவையே வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி அதை நடைமுறை படுத்தியவர் விஜயகாந்த்.
திரைப்பட தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொண்டவராக ரஜினி என்றுமே இருந்ததில்லை.
சென்னையில் இருக்கும் தன் சினிமா ஆபீசை ஒரு அன்னச் சத்திரமாகவே மாற்றி வைத்திருந்தவர் விஜயகாந்த்.
சினிமா வாய்ப்பு தேடி சென்னை வரும் இளைஞர்களுக்கு அவர் ஆபீஸ் தான் பசி போக்கும் ஆலயமாக இருந்தது.ரஜினி சோறு போட்டதாக செய்தி இல்லை.
ஈரோட்டில் பல ஆண்டுகளாக ஏழை எளிய மக்கள் பயன் அடையும் வகையில் இலவச மருத்துவமனை ஒன்றை நடத்தி வந்தவர் விஜயகாந்த்.அவ்வாறான சேவைகளை ரஜினி செய்ததில்லை.
2006 ல் தமிழகமெங்கும் ஐம்பது இடங்களில் இலவச கணினி பயிற்சி மையங்களை துவங்கி நடத்தியவர் விஜயகாந்த்.கல்விக்கென சிறு துரும்பையும் கிள்ளி போடாதவர் ரஜினி.
காவிரி பிரச்சனைக்காக நெய்வேலியில் போராட்டம் நடத்த பாரதிராஜா ஏற்பாடு செய்த பொழுது அதை புறக்கணித்தவர் ரஜினி.
பாரதிராஜாவுக்கு தோளோடு தோள் நின்று ஆதரவு தந்து போராட்டம் நடைபெற முழு ஒத்துழைப்பு தந்தவர் விஜயகாந்த்.
தன்னை மக்களுக்கு அடையாளம் காட்டிய சினிமா அழிந்து விடக்கூடாது என்பதற்காக திருட்டு விசிடி ஒழிப்பிற்காக விளம்பரப் படம் ஒன்றில் சம்பளம் பெறாமல் நடித்துக் கொடுத்தார் விஜயகாந்த்.
தன்னை வாழ வைத்த சினிமாவை வாழ வைக்க ஒன்றும் செய்யாதவர் ரஜினி.
நடிகர் சங்க தலைவராக பதவியேற்று நலிந்த கலைஞர்களின் நலனுக்காக மாதந்தோறும் ஒய்வூதியம் கிடைக்க வழி செய்தவர் விஜயகாந்த்.
தன் துறையில் இருப்பவர்கள் மீதே அக்கறையற்றவராக இருந்து வருகிறார் ரஜினி.
கருணாநிதியும் ஜெயலலிதாவும் கோலோச்சிய நேரத்திலேயே அரசியல் பிரவேசம் செய்து கட்சி தொடங்கியவர் விஜயகாந்த்.
அவர்கள் இருக்கும் போது அரசியல் பக்கமே தலை காட்டாதவர் ரஜினி.
தனது ரசிகர்களை எம்எல்ஏ களாகவும் சேர்மன்களாகவும் கவுன்சிலர்களாகவும் உருவாக்கி அழகு பார்த்தவர் விஜயகாந்த்.
தனது நம்பகமற்ற பேச்சுக்களால் தனது ரசிகர்களில் பாதி பேரை இழந்து நிற்பவர் ரஜினி.
அச்சத்தின் காரணமாக நடைபெறும் அரசாங்கங்களை குறை கூற பயந்து சிஸ்டத்தை குறை கூறியுள்ளார் ரஜினி.
ஆனானப்பட்ட ஜெயலலிதாவையே சட்டமன்றத்தில் வைத்தே நேருக்கு நேராக விரல் நீட்டி குரல் உயர்த்தி குற்றம் சொன்னவர் விஜயகாந்த்.
தான் சம்பாதித்த பணத்தை தமிழகத்திலேயே முதலீடு செய்துள்ளவர் விஜயகாந்த்.
அத்துனையையும் கர்நாடகம் மற்றும் மஹராஸ்ட்ராவில் முதலீடு செய்துள்ளவர் ரஜினி.
மொத்தத்தில் விஜயகாந்த் என்றால் துணிவு,நிர்வாக திறன்,உதவும் மனப்பான்மை,முடிவெடுப்பதில் ஆற்றல் மற்றும் எளிமை.
ஆனால் ரஜினி என்றால் மக்களுக்கு நினைவுக்கு வருவது அவரது சுயநலம்,முடிவு எடுப்பதில் காணும் குழப்பம்,ஏழைகளை பார்த்து இறங்காத மனசு,துணிவின்மை போன்றவையே.
என்ன நண்பர்களே..கொஞ்சம் யோசிக்க வைக்கிறதா ..!
அதே நேரம்..இவ்வளவு தனித்தன்மைகள் கொண்ட கேப்டனால் அரசியலில் ஜெயிக்க முடியாமல் போனதன் காரணமும் இங்கு நாம் யோசிக்க வேண்டும்.
அதற்கான காரணங்கள் விஜயகாந்த் அவர்களின் அரசியல் வளர்ச்சியை தடுக்க அவர் மீது அவதூறு செய்திகளை பரப்பி அவரின் பிம்பத்தை சிதைக்கின்ற செயல்களை கணகச்சிதமாக அரகேற்றிய பெருமை திமுக மற்றும் அதிமுகவையே சாரும்...
ஆனால் இன்று இரண்டு கழகங்களின் அரசியல் சறுக்கல்களை இந்த ஊரறியும்...

Comments
Post a Comment