Skip to main content

Any can replace viratkholi place

விராட் கோலி போன்ற வீரர்களுக்கு மாற்று வீரர்கள் மூலம் விடை கிடைக்கும், ஆனால் சச்சின் டெண்டுல்கர் இடத்தை வேறு வீரர்களால் இட்டு நிரப்ப முடியாது என்று வக்கார் யூனிஸ் தெரிவித்துள்ளார்.

மிஸ்பா உல் ஹக், யூனிஸ் கான் இருவரும் ஓய்வு பெற்றதையடுத்து பாகிஸ்தான் அணியில் ஏற்பட்டுள்ள வெற்றிடம் குறித்து பேசிய போது வக்கார் யூனிஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

பாக்.பாஷன்.நெட் இணையதளத்தில் வக்கார் யூனிஸ் கூறியதாவது:

10,000 ரன்களை டெஸ்ட் கிரிக்கெட்டில் குவித்த வீரர்களுக்கு மாற்று வீரர்கள் கிடைப்பது கடினம். இதற்கு மிகப்பொறுப்பான தொழில்நேர்த்தித் தன்மை வேண்டும். பாபர் ஆஸம் போன்ற வீரர்கள் வேறு ஒரு மட்டத்துக்கு உயர வேண்டும். மேலும் அசார் அலி, ஆசாத் ஷபிக் போன்றோரும் பேட்டிங் வரிசையில் தலைமைப்பணியாற்றிட வேண்டும். 

ஒரு வீரர் ஓய்வு பெறும்போது அந்த இடத்துக்கு மாற்று வீரர் பாகிஸ்தானில் எப்போதும் கிடைத்தபடிதான் இருந்து வந்தது. நானும் வாசிம் அக்ரமும் ஓய்வு பெற்ற போது ஷோயப் அக்தர் இருந்தார். அதே போல் உமர் குல் இருந்தார். 

ஆனால் இதனைக் கூறும்போது ஒன்றையும் நான் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாரா போன்ற வீரர்களுக்கு மாற்று கிடையாது. விராட் கோலிக்கு மாற்று வீரர் கிடைத்து விடுவார், ஆனால் டெண்டுல்கர் இடத்தை ஒருபோதும் வேறு ஒரு வீரர் இட்டு நிரப்ப முடியாது.

இவ்வாறு கூறினார் வக்கார் யூனிஸ்.

Comments