'பாகுபலி 2' திரைப்படம் வெளியாகி 5 வாரங்களை கடந்தும், தமிழக வசூலில் முதல் இடத்தில் தொடர்ச்சியாக நீடித்து வருகிறது. இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்போடு, ஏப்ரல் 28-ம் தேதி வெளியான படம் 'பாகுபலி 2'. ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன், நாசர், ராணா, தமன்னா நடிப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும், மக்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பாகுபலி 2' படத்துக்கு இந்திய திரையுலகின் முன்னணி பிரபலங்கள் பலரும் தங்களுடைய வாழ்த்தை தெரிவித்துள்ளார்கள். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் பெரும் வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது 'பாகுபலி 2'. தமிழக வசூல் 'எந்திரன்' படத்தின் சாதனையை முறியடித்து முதல் இடத்தை பிடித்துள்ளது 'பாகுபலி 2'. இதற்கு பிறகு பல்வேறு படங்கள் வெளியானாலும், தற்போது வரை சிறியளவில் மட்டுமே கூட்டம் குறைந்துள்ளதால் விநியோகஸ்தர்கள் சந்தோஷத்தில் இருக்கிறார்கள். மேலும், படம் வெளியாகி 5 வாரங்களை கடந்திருந்தாலும், மற்ற படங்களின் வசூலைப் பின்னுக்குத் தள்ளி இன்னும் வாரா...